GOVT. Dental  College & Hospital
பல் கட்டும் பிரிவு:

இங்கு பல்வேஎறு காரணங்களினால் பற்களை இழந்டோருக்கு பல் கட்டப்படுகின்றது. இங்கு பல்வேறு வகையான செயற்கை பல் கட்டப்படுகின்றது. எத்தனை பற்கள் எடுக்கப்பட்டுள்ளதோ அதற்கு ஏற்றவாரும், மொத்த பற்களும் இல்லாதோருக்கு ஏற்றவாரும் பல் கட்டப்படுகிறது.

பற்களைக் கட்ட வேண்டியக் காரணங்கள்:

1. முகத்தோற்றத்தில் முன்னேற்றம் உண்டாக்க

2. உணவு உண்ணுதல்

3. பேசும் திறன்

4. மற்ற பற்க்களை பாதுகாக்க

பற்கள் இல்லாத போது உதடுகள் மற்றும் கன்னம் உள்ளே சென்று விடுகின்றன. குழி விழுகிறது. முகத்தின் உயரம் குறைந்து விடுகின்றது. சருமத்தில் சுருக்கங்கள் உண்டாகின்றன. மேலும் பல் இல்லாத காரணத்தால் நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கின்றனர்.நன்றாக சென்று உண்ணாத காரணத்தினால் அஜீரண கோளாறுகள் ஏற்படுகின்றன. அது மட்டுமன்றி பற்களில் இடைவெளி உள்ள போது, பேசும்பொழுது உச்சரிப்பில் சிரமும் ஏற்படுகின்றது. பல் இல்லாத நிலையில் எதிர்பல் கீழே இறங்கவும், மேலே செல்லவும் வாய்ப்புள்ளது. இதையெல்லாம் தடுக்க பற்கட்டும் பிரிவில் பல்வேறு வகையான செயற்கை பல்கட்டும் முறைகள் கையாளப்படுகிறது.

1. தினமும் கழட்டி சுத்தம் செய்து உபயோகிக்கபடும் செயற்கை பல் (Remouable Pantial Deuture) :

அருகில் உள்ள நிலைப் பற்கள் ஆரோகொயமாக இல்லாத போதும் நிறைய பற்கள் கட்டப்படுகின்றன. இவ்வகை செயற்க்கை பற்கள் கம்பிகளுடன் இருக்கலாம் அல்லது கம்பிகள் இல்லாமல் இருக்கலாம். இம்முறையில் நிறைய பற்கள் கட்டப்பட வேண்டும் என்றால் ப்ளாஸ்டிக் ப்ரேம்களுக்கு பதிலாக மெட்டல் பிரேம்கள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை ப்ரேம்கள் அதிக எடை இல்லாதவை. நல்ல பலமும், இற்றுப்போகாத தன்மை கொண்டவை. இம்முறையில் செயற்கை பல் பொறுத்தும் போது பற்களில் கம்பி வருவதை தடுத்து "ப்ரிசிஷன் அட்டாச்மென்ட்" டென்சர்கள் செய்யப்படுகின்றது.

2. நிரந்தர செயற்கை பல்:

பல் இல்லாத இடதின் அருகே ஆரோக்கியமான நிலை பற்கள் இருந்தால், இத்தகைய முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அருகில் உள்ள நிலைப் பற்களின் துணையுடன் இந்த செயற்கைப் பற்கள் இயங்குகின்றன. முதலில் நிலை பற்கள் செதுக்கப்படுகின்றது. பின்பு அளவு எடுக்கப்பட்டு நிரந்தரமான செயற்கை பல் தயார் செய்யப்படுகின்றன். இயற்கைப் பற்கள் எந்த அமைப்பில், வடிவில் இருக்குமோ அதே போன்றே செயற்கை பற்களும் செய்யப்படுகின்றன.

3. முழுமையான பற்கள்:

முழுமையாஅன செயற்கை பல் கட்டும் முறையில் அன்னத்தின் மீது மேல் செட் ஒட்டிக் கொள்வதால் சேல் செட்டில் பிடிப்பு அதிகமாக உள்ளது. கீழ் பல் செட்ட்டில் தாடை எலும்பின் உதவி கொண்டு பல் செட்டுகள் இயங்குகின்றன. நாக்கும் பல் செட்டை எதிர்க்கும் மேல் பல்செட் நிறைய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதால் அதிக பிடிப்புடன் இருக்கும்.

4. உடனடியாக அணியகூடிய செய்ற்கை பல் (Immediate Denture) :

பற்களை எடுத்தப்பின்னர் புண் ஆறும் வரை உடனடியாக அணியகூடிய செயற்கை பல் முறைகளும் இங்கு கடைபிடிக்கப்படுகிறது. இம் முறையில் புண் குணம் அடையும் வரை தற்காலிகமாக அளிக்கப்படுகின்றது.நன்றாக புண் ஆறிய பின்னர் நிரந்தர செயற்கை பல் சிகிச்சை அளிக்கப்படும்.

இங்கு தினமும் கழற்றி சுற்றம் செய்து உபயோகிக்கப்படும் செயற்கை பல் (Removable Patial Denture) நிரந்தரமான செயற்கை பல்லும் (Fixed Patical Denture), மொத்த பற்களும் இல்லாதவற்கு செயற்கையான மொத்தபற்களும் (Complete Denture) செய்து கொடுக்கப்படுகின்றது.

இது மட்டுமல்லது எலும்புகளில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் நிரந்தரமான செயற்கை பல் (Implants) பொருத்தப்படுகின்றது.

பிறந்த குழந்தைகளுக்கு அண்ணப்பிளவு இருப்பின் அவர்களுக்கும், மேல் தாடையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அடைப்புத் தட்டு பொருத்தப்படுகின்றது. இதன் மூலம் பால்,(Obtureator) தண்ணீர், உணவு உட்கொள்ளவும், பேசுவதற்கும் அவர்களுக்கு எளிதாக இருக்கும்.

கண், மூக்கு, காது போன்ற உறுப்புகள் இல்லாமல் இருப்பின் செயற்கை கண், மூக்கு, காது போன்றவை அவர்களின் நிறங்களுக்கு ஏற்றவாறு செய்யப்படுகின்றது.

இவ்வாறு பல்கட்டும் பிரிவில் செய்யப்படும் சிகிச்சையினால் பார்வைக்கு மட்டும் அல்லாமல் நோயாளிகள் நன்றாக, பேசுவதற்கும்,சத்தான உணவினை உட்கொள்வதற்கும் வழி வகுக்கின்றது.

பல் பாதுகாக்கும் பிரிவு:

இங்கு சொத்தையினாலும், அடிப்பட்டதினாலும் பாதிக்கப்பட்ட பற்களும், வேறு பல் காரணங்களால் நிறம் மாறிய பற்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. சொத்தையின் அளவிற்கு ஏற்றவாறு பற்களுக்கு தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் அடைப்பு வைக்கப்படுகின்றது. பற்களை அடைப்பதற்கு பல்வேறு சிமெண்டுகள் உபயோகப்படுகின்றது(Zine Oxide, Evgenol, Zinc Phosphate, Calcium Hydroxide, Zinc Polycorboxylate, Iml Percelan) நிரந்தரமாக அடைப்பதற்கு() வெள்ளி போன்ற பொருட்களும் உபயோகப்படுத்தப்படுகின்றது.

உடந்த பற்களுக்கு லைட் கியூர்(LC) அந்த பற்களின் நிறத்திற்கு ஏற்றவாறு அடைப்பதற்க்கு உபயோகப்படுத்தப்படுகின்றது.

பல்லின் வேர்பகுதி சிகிச்சை:

சொத்தை பரவும் பொழுது, எனாமல் அரிக்கப்பட்டு பின்னர் டென்டின் தாக்கப்படுகிறது. டென்டின் கடந்து சொத்தை செல்லும் பொழுது, பற்கூழ் தாக்கப்படுகின்றது. பற்கூழ் சேதமடைந்த தென்றல் பல் வேர் சிகிச்சை.

பல் வேர் சிகிச்சை செய்வதன் மூலம் பல் பிடுங்கப்படாமல் காப்பாற்றப்படுகின்றன.இரண்டுமூன்று கட்டங்களாக இச்சிகிச்சை செய்யப்படுகின்றது. இச்சிகிச்சை மூலம் பற்கூழ் முழுமையாக நீக்கப்படுகின்றன. வேர்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. பல் வேர்சிகிச்சை செய்யும் பொழுது முதலில் மரக்கச் செய்யும் ஊசிப் போடப்படுகின்றன.

அப் பகுதி மரத்த பின்னர் "பற்களின்" உதவியால் பற்களில் திளை போடப்பட்ட்டு, துளையின் வழியோ, பற்கூழ் நீக்கப்படுகின்றது. பற்கூழ் நீக்கப்பட்ட பின்னர், அதனை சுற்றியுள்ள சுவர்கள் சுத்தப்படுத்தப்படுகிறது.

பிறகு ஜி.பி. பாய்ண்ட் என்று அழைக்கப்படும் செயற்கை நரம்பு போன்ற பொருட் மற்றும் சிமென்ட் கொண்டு வேர் அடைக்கப்படுகின்றது. வேர் சிகிச்சை முடிந்த பின்னர் பற்கள் அடைக்கப்படுகின்றன.உடைந்த பற்களுக்கு "க்ரெளன்கள்" போடப்படுகின்றன. பற்களின் வேரின் அருகில் சிகிச்சைக்கு பின்னரும் நீர் கோப்பு இருந்தால் எபிஸெக்டமி என்ற அறுவை சிகிச்சை மூலம் நீர் கோப்பு நீக்கப்பட்டு பின் வேர் பின்புறமாக அடைக்கப்படுவதுண்டு பிறகு அந்த பற்களுக்கு ஏற்றவாறு பற்தொப்பி (Gown, JC) செய்யப்படுகின்றது. பல் சொத்தையினால் பற்சிதைவு அதிகமாக இருப்பின் இன்லே(Ilay) செய்யப்படுகின்றது.

பற்கள் நிறம் மாறுவதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. சில பிறவியிலேயே நிறமாற்றாம் இருக்கும். மருந்து உட்கொள்ளுதல் மற்றும் தண்ணீரில் ப்ளூரைட் அதிகமாக இருந்தாலும் பற்கள் நிறம் மாறும். இதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. முன்பற்களுக்கு இடையே ஏற்படும் இடைவெளி (Midline Diastema) இங்கு சரி செய்யப்படுகின்றது.

© Copyright 2008 - Tamilnadu Dental College
Powered by DailyBread Host