GOVT. Dental  College & Hospital
ஐ.ஒ.பி.ஏ. எக்ஸ்ரேக்கள்:

இம்முறையில் 3 - 4 பற்கள் ஒரே பிலிமில் படம் பிடிக்கப்படுகின்றன. ஒரு பல்லில் நோய் உள்ள தென்றால் அருகில் உள்ள பற்களின் நிலையயும் ஒரு பிலிமில் தெரிந்து கொள்ளலாம்.

பனோரமிக் எக்ஸ்ரேக்கள் :

12" X 6" அலவு பெரிய பிலிம்கள் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. எல்லா பற்களும் தாடை எலும்பும், தாடை மூட்டும், சைனஸ் மற்றைய பகுதிகளும் ஒரே பிலிமில் படம் பிடிக்கபடுகின்றன.

IOPA பிலிம் வாயினுள் வைக்கப்படுகின்றது. பனோரமிக் பிலிம் பெரியது. ஆகையால் வாய்க்கு வெளியே வைத்து பிலிம் எடுக்கப்படுகின்றது. சில சமயங்களில் வாய் திறக்கமுடியாத நிலையின் போது பனோரமிக் பிலிம்கள் நல்ல பயன் தருகின்றன. பனோரமிக் முறையில் எல்லா பற்களின் நிலையினையும் ஒரே பிலிமில் அறிந்து கொள்ள முடியும்.

பைட்விங் பிலிம்கள்:

பற்கள் பொதுவாக, வரிசையாக ஒன்றுடன் ஒன்று இடைவெளி இன்றி இருக்கின்றன். இதனால் பக்கவாட்டில் சொத்தை ஏற்படுவதுண்டு --- மற்றும் பனோரமிக் பிலிம்களில் இவ்வகையான சொத்தை தெரிவதில்லை. இது போன்ற சமயங்களில் பைட்விங் பிலிம்கள் நல்ல பயன் தருகின்றன.

முகம், குழிப்பை, தாடை, மூட்டு எலும்பு ஆகியவற்றிற்காக எடுக்கப்படும் படங்களான.

பி.ஏ.ஸ்கேல் (PA Skull)
பி.என்.எஸ் (PNS)
எச்.எம்.வி (SMV)
டவுன்ஸ் படம் (Journes Veio)
டிரான்ஸ் கிரேனியல் (Trans Cranical)
டிரான் ஆர்பைடல் (Transorbital)
டிரான்ஸ் பாரின்சியல் (Transpharyngeal)

போன்று பல்வேறு வகையான படங்கள் எடுக்கப்படுகின்றது. இவை மட்டுமல்லாது மேல்தாடை மற்றும் கீழ்தாடை அவற்றை சுற்றியுள்ள்ள உறுப்புகள் அனைத்தையும் ஒரே படத்தில் பார்க்ககூடிய ஊடுகதிர் படமான ஆர்த்தோ பேன்டோமோக்ராம் (OPG) மற்றும் செப்பலோகிராம்(Cephalogram) படங்களும் எடுக்கப்படுகின்றது. கணினியின் உதவியுடன் எக்ஸ்ரே படங்களை எடுப்பதற்கும், அவ்வாறு எடுக்கப்படும் படங்களின் நிழற்படங்களை (Image)ஐசேகரித்து வைக்கவும் உதவியாக இருக்கும் ரேடியோ விசியோகிராஃபி(RVG) போன்ற கருவிகளும் உள்ளது.

வாய் மற்றும் முக அறுவைச் சிகிச்சை பிரிவு:

இங்கு தசையவுகல் தடைப்பொருள்() கடைப்பிடித்து பல் எடுக்கப்படுகின்றது.

எலும்பினுள் புதைந்து இருக்கும் ஞானப்பல் மட்டும் அல்லாது பிறவகையான புதைப்பற்களும் இங்கு

பல் பிடுங்கும் பகுதி :

அதிகப்படியான ஆட்டம் கண்ட பற்கள் மற்றும் காப்பாற்ற இயலாத பற்கள் பிடுங்கப்படுகின்றன. பல் வரிசை சீரமைப்பின் போதும், போதுமான இடம் இல்லாத போதும் பல்லை நகர்த்த தேவை ஆன இடம் கிடைக்க முன் கடைவாய் பற்கள் பிடுங்கப்படுகின்றன.

நோயுள்ள பற்கள் சிஸ்ட் (Cyrt)உண்டாகும் போது அவை பிடுங்கப்படுகிறது.

ஞான பற்கள் முளைக்கும் பொழுது போதுமான இடம் இல்லாத காரணத்தால் தொந்தரவு கொடுத்தால் அவை பிடுங்கப்படுகின்றன.

பற்களை பிடுங்கும் முன், தேவைப்பட்ட மற்ற மருத்துவ சோதனைகளும் செய்யப்படுகின்றன. அலர்ஜி உண்டாகும் தன்மை, இரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி உள்ள நோயாளிகள் பொது மருத்துவ பிரிவில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வர பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட பிறகு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சில சமயங்களில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. உணர்வு மரக்கடிக்கபட்ட பின்னர், ஈறுகள் பிரிக்கப்பட்டு உள்ளே புதைந்துள்ள பற்கள் பிடுங்கப்படுகின்றன.

போதுமான பிடிப்பு இடுக்கிக்கு கிடைக்கவில்லை என்றால், சிறிது எலும்பு எடுக்கப்பட்டு அதன் பின்னர் வேர்கள் பிடுங்கப்படுகின்றன. பல் பிடுங்கிய பின் நோயாளிகளுக்கு பல் எடுத்த பிறகு கடைபிடிக்க வேண்டிய முறைகளை பற்றி ஆலோசனை வழங்கப்படுகின்றது.

1. பல் எடுத்த இடத்தில் கட்டாயமாக நாக்கையோ, விரலையோ விட்டுத் துலாவக்கூடாது.

2. பல் எடுத்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள பஞ்சை ஒரு மணி நேரம் இறுக்கக் கடித்திருக்க வேண்டும் வேறு பஞ்சு மாற்றக்கூடாது.முதலொரு மணி நேரத்தில் கட்டாயமாக எச்சில், துப்புதல், வாய் கொப்பளித்தல் மற்றும் உணவு உண்ணுதல் கூடாது. எச்சில் தேங்கினால் விழுங்க வேண்டும்.

3. கஞ்சியும், கடினமில்லாத உணவுகள் மட்டுமே முதல் நாளன்று உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள். அவையும் மிதமான சூட்டிலோ அல்லது குளுமையாகவோ இருக்க வேண்டும்.

4. வலி நிவாரண மாத்திரையினை மருத்துவர் அறிவுரைப்படி சப்பிட வலியுறுத்தப்படுகிறார்கள். பற்களைப் பிடுங்கிய பின்னர், அவை தாடையில் இர்ந்த இடத்தில் குழி இருக்கும் பல் எடுத்த பின் புண் மெதுவாக குணமடையும். அந்த குழியில் இரத்தகட்டி இருக்கும். சில சமயங்களில் சாப்பிடும்பொழுது குழியிலிருந்து இரத்தகட்டி வெளியே வந்து விடுவதுண்டு. இதனால் எலும்பில் பாதிப்பு உண்டாகிறது. இதனால் வலியும் துர்நாற்றமும் வரும். அதனால் பல் எடுத்த பின்னர் வாய் கொப்பளித்தல், கடினமான உணவு உண்ணுதல், நாக்கில் விரலை வைத்து துலாவுதல் கூடாது.

அடிப்பட்டு தாடை எலும்பு முறிவுடன் வருபவர்களுக்கு ஐ.எம்.எப் (IMF, Screws, Plates)போன்றவற்றை பயன்படுத்தி தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. முக அழகிற்கு தாடை அறுவை சிகிச்சை, உதட்டுப்பிளவு, அண்ணப்ப்பிளவு ஆகியவற்றை சரி செய்யும் அறுவை சிகிச்சையும் இங்கு செய்யப்படுகிறது. தாடை மூட்டு, தாடை, உமிழ்நீர் சுரப்பிகள், தாடையை சுற்றி உள்ள உறுப்புகளில் ஏற்ப்படும் கட்டி, புண் போன்ற நோய்களுக்கு சதைப் பரிசோதனை (Biofsy) செய்யப்பட்டு, நோயின் தன்மையைக் கண்டறிந்த பின்னர் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகின்றது. மயக்க மருந்தின் கீழ் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு என சென்னை பொது மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள் பிரிவில் அனுமதித்து சிறப்பு மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் செய்யப்படுகின்றது.

© Copyright 2008 - Tamilnadu Dental College
Powered by DailyBread Host